மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

பேருவளை கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி இன்று (07) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மீனவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படகில் இருந்த மற்றுமொரு மீனவரும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )