வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மாத்தறை,  அம்பாந்தோட்டை, குருநாகல், அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் கடும் மின்னல்,  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )