கனமழை எச்சரிக்கை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை அறிவிப்பு

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் , சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனமழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலால் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )