
நாட்டின் பல பகுதிகளில். 100 மி.மீட்டருக்கும் அதிக மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று
100 mmக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் தாழமுக்கமாக மாறியுள்ளதாக வானிலை அவதான நிலையம்தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று வானிலை அவதான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

