
மிஸ் யுனிவர்ஸ் 2025 பட்டம் சூடிய மெக்சிகோ அழகி
தாய்லாந்தில் இன்று (21) நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2025 சர்வதேச அழகிப்போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் உலக அழகி பட்டத்தை வென்றார்.
இறுதிச்சுற்றில் சிலி, கொலம்பியா, கியூபா, குவாடலூப், மெக்சிகோ, புவேர்ட்டோ ரிக்கோ, வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மால்டா மற்றும் கோட் டி’ஐவோயர் உள்ளிட்ட 13 நாடுகளின் போட்டியாளர்கள் இடம்பிடித்தனர்.
தாய்லாந்தின் பிரவீனர் சிங் முதல் ரன்னர்-அப்பாகவும், வெனிசுலாவின் ஸ்டெபானி அபாசாலி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும், பிலிப்பைன்ஸின் மா அஹ்திசா மனலோ மூன்றாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வானனர். கோட் டி’ஐவோயரின் ஒலிவியா யாஸ் நான்காவது ரன்னர்-அப்பாகப் பெயரிடப்பட்டார். இந்தியாவின் மணிகா விஸ்வகர்மா முதல் 12 போட்டியாளர்களுக்குள் இடம்பிடிக்க முடியவில்லை.
CATEGORIES World News

