மாலைத்தீவில் வேலை வாய்ப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

மாலைத்தீவில் வேலை வாய்ப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

மாலைத்தீவில் வேலை வாய்ப்புகள் உள்ளதாகக் கூறி, இலங்கை தொழிலாளர்களை தவறாக வழிநடத்திச் செய்யப்பட்ட நிதி மோசடி குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயம் தொடர்பில் பணியகத்திற்கு முறைபடளித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக், லிங்க்டின் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, ஒரு குழுவினர் , இலங்கை தொழிலாளர்களுக்கு மாலத்தீவில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி விளம்பரங்களை வெளியிட்டு, அதற்காக பணம் வசூலித்து பல்வேறு முறைகள் மூலம் மக்களை மாலத்தீவுக்கு அனுப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவ்வாறு இலங்கையிலிருந்து மாலத்தீவிற்கு வந்தவர்களுக்கு மாதாந்த சம்பளம் ரூ. 60,000 – 80,000 வரையில் பெற்றுக்கொள்ளும் வகையிலான வேலைவாய்ப்புகளை இந்த குழுவினர் வழங்கியுள்ளனர் எனவும் , மேலும் ரூ. 350,000 முதல் ரூ. 500,000 வரையிலும் ஊதியம் வழங்கப்பட்டும் வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான குழுவினால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள், செவிசாய்க்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பணியகத்தின் உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் மட்டுமே வேலை வாய்ப்புகளைத் தேடுவது அவசியம் எனவும் அதுவே பாதுகாப்பானது எனவும் பணியகம் கூறியுள்ளது .

சுயதொழில் தொடர்பான தொழிலுக்கு செல்பவர்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )