
சீரற்ற வானிலையால் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது117 என்ற எண்ணிற்கு அழையுங்கள்
சீரற்ற வானிலையால் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது 117 என்ற எண்ணிற்கு தெரிவித்து உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையால் ஏற்படும் ஆபத்துக்கள் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு மையங்களை நிறுவவும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

