
மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வு
மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (05) காலை 6.30 மணி வரையான நிலவரப்படி நாட்டின் ஏனைய ஆறுகளின் நீர் மட்டம் சாதாரணமாக இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

