தமிழக அரசினால் 950 தொன் நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல் இன்று இலங்கைக்கு

தமிழக அரசினால் 950 தொன் நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல் இன்று இலங்கைக்கு

தமிழக அரசின் சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிவாரண பொருட்களை சுமந்து சென்ற கப்பலை , சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இலங்கை மக்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வரும் வகையில், தமிழக அரசு துணை நிற்கும் என்றும், துயருறும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை அனுப்பிவைப்பதாகவும் , அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம் என்றும் புயலால் உயிரிழந்தவர்களுக்கு தனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )