
சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்வு 213 பேரை காணவில்லை 2,054,535 பேர் பாதிப்பு
சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற வானிலையால் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
4309 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 69,635 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

