ஆசை படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

ஆசை படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘இஷ்க்’ (Ishq) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆசை’ ஆகும்.

மலையாளத்தில் ஷேன் நிகம் மற்றும் ஆன் ஷீட்டல் நடித்த கதாபாத்திரங்களில், தமிழில் கதிர் மற்றும் திவ்யபாரதி நடித்துள்ளனர்.

‘ஜீரோ’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவ் மோஹா, இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

லிங்கா, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ளது. படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.

ரொமாண்டிக் திரில்லர் வகையில் உருவாகியுள்ள ‘ஆசை’, ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர் மற்றும் ‘பேச்சுலர்’ புகழ் திவ்யபாரதி ஆகிய இருவருக்கும் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஆசை’ திரைப்படம் வரும் மார்ச் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )