
தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதனுடன் இணைந்து, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வைத்தியர்களின் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (23) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

