தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டசொகுசு கார் யாருடையது ? பொலிஸார் தீவிர விசாரணை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டசொகுசு கார் யாருடையது ? பொலிஸார் தீவிர விசாரணை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட சொகுசு கார் ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர் .

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்அபரெக்க மற்றும் பெலியத்த இடையேயான 140 ஆவது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் இந்த சொகுசு கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய , அபரெக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட கார் , மேலதிக விசாரணைக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது..

காருக்குள் இருந்த டிக்கெட்டில், அது தொடங்கொட நுழைவாயிலில் உட்சென்று மத்தள நோக்கிச் பயணித்தமை தெரியவந்துள்ளது .

குறித்த சொகுசு காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இரத்தினபுரி பகுதியில் உள்ள ஒருவருக்கும் அதே பதிவு எண் கொண்ட கார் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இரண்டு கார்களின் பதிவு எண்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இயந்திர எண் வேறுபட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கார் மெரூன் நிறத்தில் உள்ளது எனவும்
இரத்தினபுரியில் உள்ள அதே பதிவு எண் கொண்ட கார் வெள்ளை நிறத்தில் உள்ளது எனவும் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

கைவிடப்பட்ட கார் திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், காரின் கதவுகளைத் திறந்து பரிசோதித்த போது , ​​சாரதி இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில், குருநாகல் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியின் பெயர் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் ஒன்றும் டைரி ஒன்றும் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த டைரியில் இருந்த அடையாள அட்டை ,புகைப்பட நகலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​பொதுஹெர பகுதியில் உள்ள ஒரு நபரின் பெயர் மற்றும் முகவரி கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை நடத்த பொதுஹெர போலீசாருக்கு அந்த முகவரி தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த முகவரியில் உள்ள நபர் குறித்து விசாரித்த போது அவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் இந்த கார் மற்றும் இரத்தினபுரி கார் யாருடையது என்பதை கண்டறியும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )