
நோபல் அமைதி பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த ஈரான்
ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
நா்கீஸ் முகமதி அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக முன்னதாகவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2022-ல், ஹிஜாப் அணியாததால் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாஷா அமீனி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் ஈரானில் பரபரப்பான போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்திற்கு நா்கீஸ் முகமதி சிறையில் இருந்தபோதும் ஆதரவு தெரிவித்தார்.
இதனால் அவரது புகழ் மேலும் உயர்ந்தது. 2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது.
நா்கீஸ் முகமதி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19வது பெண் மற்றும் ஈரானின் இரண்டாவது பெண் பரிசு பெறும் நபராகும்.
இதற்கிடையே, கடந்த 2-ம் திகதியிலிருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஈரான் அரசு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

