டி20 உலகக் கிண்ணம் ; இத்தாலியை வீழ்த்திய ஸ்கொட்லாந்து

டி20 உலகக் கிண்ணம் ; இத்தாலியை வீழ்த்திய ஸ்கொட்லாந்து

2026 ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது.

208 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலடி கொடுத்த இத்தாலி அணி, 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால் தோல்வியடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )