அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று (23) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.

இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிகோல்ஸ்கி நகரில் இருந்து தென்மேற்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆனால், சுனாமி எச்சரிக்கை எதனையும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பிறப்பிக்கவில்லை. இதனால், பொருளிழப்புகளோ, கட்டிட இடிபாடுகளோ அல்லது யாருக்கும் பெரிய பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )