
நாட்டில் கடந்த ஆண்டு ரேபிஸ் காரணமாக 14 உயிரிழப்புகள்
கடந்த ஆண்டு நாட்டில் ரேபிஸ் நோயால் 14 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்த இறப்புகளில் பெரும்பாலானவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகள் கடியினால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.
குறிப்பாக, புத்தளம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றிய பின்னர், அது 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலையாக மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், விலங்கு கடியால் காயமடைந்தவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுதல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
CATEGORIES Sri Lanka

