இஸ்ரேல் – ஈரான் மோதல் ; அமைதியான தீர்வு அவசியம்

இஸ்ரேல் – ஈரான் மோதல் ; அமைதியான தீர்வு அவசியம்

இஸ்ரேல்–ஈரான் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய அன்டோனியோ குட்டரெஸ், ஈரான் மீதான அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலும், அதற்கான ஈரானின் பதிலடி நடவடிக்கைகளும் கண்டிக்கத்தக்கவை என தெரிவித்தார்.

இந்த மோதல்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும், நிலைமை மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வியன்னாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இத்தாக்குதல் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் உடனடி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சர்வதேச சட்டத்தை மதிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அணுசக்தி பாதுகாப்பு குறித்த ஆபத்துகளைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )