
நிட்டம்புவவில் 60 வயதுடைய சடலம் மீட்பு
நிட்டம்புவ, ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 60 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர் எனவும் சுமார் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட சாரம் அணிந்திருந்ததுடன், முகம் முழுவதும் தாடி வளர்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் வதுபிடிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

