மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்காக ரஷ்யா தீவிரமாக தலையிடும்

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்காக ரஷ்யா தீவிரமாக தலையிடும்

  • புடினின் கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காக ரஷ்யா தீவிரமாக தலையிடத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தும் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒரு பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக புடின் எச்சரித்துள்ளார்.

நேற்று (மார்ச் 01), வளைகுடா பிராந்தியத்தின் நான்கு முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இதனை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே பல அரபு நாடுகளைப் பாதித்துள்ள இந்த மோதல் மேலும் விரிவடைந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களையும் ரஷ்யா தொடர்ந்து வன்மையாகக் கண்டித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )