
உலகெங்கும் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளுக்குஇனி பாதுகாப்பில்லை – ஈரான் பகிரங்க எச்சரிக்கை
உலகெங்கும் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இனி பாதுகாப்பில்லை என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
ஈரானிய உயர்மட்ட இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷேகார்ச்சி விடுத்துள்ள அதிரடிச் செய்தியில்,
“எங்களிடம் உள்ள உங்களைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில், இனி நீங்கள் செல்லும் பூங்காக்கள், சுற்றுலாத் தளங்கள் என எந்த இடமும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பால் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ,ஈரானின் கடற்படை கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் ஈரான் போ *ர் முடிவுக்கு வரும்.. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் தெரிவித்தார்.

