தரம் I வைத்திய அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்:சுகாதார அமைச்சு அறிவிப்பு

தரம் I வைத்திய அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்:சுகாதார அமைச்சு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதியுடன் தமது பயிற்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளிடம் இருந்து, தரம் I வைத்திய அதிகாரி பதவிகளுக்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஏப்ரல் 4 ஆம் திகதி நண்பகல் 12:00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அனைத்து விண்ணப்பங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் விண்ணப்பதாரர்களே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சு எந்தவிதப் பொறுப்பையும் ஏற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )