
வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலைஅடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது
வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை
அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை அடையாளம் தெரியாத நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்த நிலையில்
அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் தெரியாத நபர்கள் மீண்டும் தோண்டி, அதிலிருந்த தலையை மட்டும் அகற்றிச் சென்றுள்ளதாக உயிரிழந்தவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மயானத்தில் அண்மையில் வேறொருவரின் இறுதிச் சடங்கு இடப்பெற்ற போது, அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசிய போதே, சடலம் தோண்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

