
ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி – டொலருக்கான ரூபாயின் பெறுமதி 317 ஐ கடந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (ஏப்ரல் 24) மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ தினசரி செலாவணி விகிதங்களின்படி,
கொள்வனவு விலை – ரூ. 314.03
விற்பனை விலை – ரூ. 321.87
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் சுட்டிக்காட்டப்பட்ட உடனடி செலாவணி விகிதம் இன்று ரூ. 317.17 ஆகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நிலைமைகள், இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு பணப்புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வெளிநாட்டு செலாவணி சந்தையில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை காரணமாக இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகள் மற்றும் உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

