
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனான் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
லெபனானின் ஆட்ஷிட் (Adshit) நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், Kfardjal–Nabatieh வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு வாகனத்தை இலக்காகக் கொண்டு ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து பாதையாக விளங்குவதால், இதற்கு முன்பும் பலமுறை இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், Froun, Ghandoorieh மற்றும் Wadi al-Slouqi ஆகிய பகுதிகளின் புறநகரப் பகுதிகளில் மீண்டும் தாக்குதலால் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

