ஜூலை 1 முதல் புதிய VAT நடைமுறை

ஜூலை 1 முதல் புதிய VAT நடைமுறை

திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இது ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறைகளின் படி, மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கும் VAT வரி அறவிடப்பட உள்ளது.

இதற்காக டிஜிட்டல் சேவைகளுக்கான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பிரதான சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பும் திருத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வரி விதிக்கத்தக்க காலப்பகுதியின் முடிவில் இலங்கைக்குள் பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த விநியோக மதிப்பு 9 மில்லியன் ரூபாயை மீறினால், அந்த நபர் கட்டாயமாக VAT-க்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

இதற்கிடையில், நிதிச் சேவைகள் மீதான VAT வரி வீதத்தை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் அரசின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வரி அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )