கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னடைவு

கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னடைவு

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, கொளத்தூர் தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. அதே தொகுதியில் M. K. ஸ்டாலின் பின்னடைந்துள்ளார்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட அமைச்சர்கள் கீதா ஜீவன், நாசர், முத்துசாமி மற்றும் ரகுபதி ஆகியோரும் பின்னடைந்துள்ளனர்.

வில்லிவாக்கம் தொகுதியில் தவேக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பின்னடைந்துள்ளார்.

மேலும், எழும்பூர் தொகுதியில் தவேக வேட்பாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி முன்னிலைப் புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

தவெக – 103
திராவிட முன்னேற்றக் கழகம் – 50
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 74

வெளியேறிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )