முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன மீனவர்கள் நேற்று (03) காலை சுமார் 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக உடனடியாக இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதி மீனவர்கள் இணைந்து நேற்று குறித்த கடற்பகுதியில் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் இன்று மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )