
கோட்டை – மருதானை இடையில் ரயில் ஒன்று தடம்புரள்வு
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் இன்று (23) காலை கடுகதி ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கி பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வேத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
சம்பவம் காரணமாக ரயில் பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

