
முத்துகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
குருநாகல் – கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல – கிரியுல்ல வீதியின் முத்துகல பகுதியில் இன்று (23) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரியுல்லவிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் கடுமையாக காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரியுல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

