களனி ரஜமகா விகாரை பெரஹெவிற்காக இன்று பி.ப 3மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்                                         மாற்று வீதிகள் குறித்த அறிவிப்பு

களனி ரஜமகா விகாரை பெரஹெவிற்காக இன்று பி.ப 3மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் மாற்று வீதிகள் குறித்த அறிவிப்பு

களனி ரஜமகா விகாரை வருடாந்திர துருத்து மகா விழாவுடன் இணைந்து நடத்தப்படும் ஹெலனா பாலிகா வித்தியாலய பெரஹெர நிகழ்வுகளுக்காக இன்று (23) பிற்பகல் 3 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

ஹெலனா ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இருந்து பெரஹெரா தொடங்கி, கல்பொரெல்ல, வாலங்காட சந்திக்கு அருகிலுள்ள மாவத்தைக்குள் நுழைந்து, களனிசிரி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பியகம வீதி வழியாக களனி ராஜமகா விகாரையின் பிரதான வாயிலுக்குள் நுழையும் என பொலிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெரஹெரா நிறைவடையும் வரை பின்வரும் வீதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் மாற்று வழிகள் குறித்தும் போலீசார் அறிவித்துள்ளனர்.

  • கிரிபத்கொட டயர் சந்தியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நுங்கங்கொட சந்தியிலிருந்து தொரண சந்தி நோக்கி திருப்பி விடப்படும்.
  • பியகம வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் களனி ரஜமகா விகாரையின் பியகம வீதி வஹல்கடவிலிருந்து கங்கவெல்ல வீதி வழியாக களனிசிரி சுற்றுவட்டத்திற்கு திருப்பி விடப்படும்.
  • பேலியகொடவிலிருந்து பியகம நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் களனிசிறி சுற்றுவட்டத்தினூடாக களனி ராஜ மகா விஹாரையின் பியகம வீதி வஹல்கட நோக்கி திருப்பி விடப்படும்.

. ஊர்வலம் ஆரம்பமாகும் களனி சிரி சுற்றுவட்டத்தின் விஹார மாவத்தை பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

  • பெரஹெர ஊர்வலம் விஹார மாவத்தையை அடையும் வரை முல்லேரியா -பியகம வீதி வழியாக பியகம நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் வெளியேறுவதற்காக மட்டும் அனுமதிக்கப்படும் .
  • பியகமவீதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் களனி ராஜ மகா விஹாரையின் பியகம வீதி வஹல்கடவிலிருந்து கங்கவெல்ல வீதி வழியாக களனிசிரி சுற்றுவட்டத்திற்கு திருப்பி விடப்படும்.
  • பியகம வீதியிலிருந்து வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து அல்லது விஹார மாவத்தை சந்தி வழியாக வராகொட நோக்கி திருப்பி விடப்படும்.
  • கண்டி வீதி , பேலியகொட பட்டிய சந்திக்கு அருகிலிருந்து வராகொட வீதிக்குள் நுழையும் வாகனங்கள் தொரண சந்தி நோக்கி திருப்பி விடப்படும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )