மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக தடைபட்ட மின்சார விநியோகத்தை மீட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (03) பகல் போவத்த–வீரபொகுண பகுதியில் மின் இணைப்பை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்தது.

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக வீரபொகுண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

உயிரிழந்தவர் குளியாபிட்டி–ஹெட்டிபொல பிராந்திய சேவை நிலையத்தில் பணியாற்றிய 41 வயதுடைய மின்சார சபை ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )