
மது அருந்திய நண்பர்கள் இடையிலான தகராறு ; ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவர் உயிரிழந்துள்ளார்.
குருநகர் புதுமைமாதா தேவாலயத்திற்கு அருகில் இரு நண்பர்கள் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியுள்ளது.
இதன்போது ஒருவர் மற்றையவரை மதுப் போத்தலால் தலையில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் குருநகர் பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பிரதீபன்

