
இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சிந்துகேசரி’ நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS சிந்துகேசரி (INS Sindhukesari) நீர்மூழ்கி கப்பல், செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய முறைப்படி வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, நீர்மூழ்கி கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கையிலுள்ள பல சுற்றுலாத்தலங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விஜயமானது இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

