
கொளத்தூரில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய தொகுதி நிலவரத்தின்படி, தமிழக வெற்றி கழகம் (தவெக) முன்னிலையில் இருப்பதாகவும், அதிமுக இரண்டாவது இடத்திலும், திமுக மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 12.00 மணி நிலவரப்படி, 234 தொகுதிகளில்
தவெக 108 இடங்களிலும்,
அதிமுக கூட்டணி 67 இடங்களிலும்,
திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை தொடர்கிறது.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொளத்தூரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பாபு 19,804 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மு.க. ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார்.

