
இலங்கை மற்றும் மாலைதீவு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பின்வரும் துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன,
சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு
இளைஞர் அபிவிருத்தி,- ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளைச் சார்ந்ததாக இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

