
மோதல்களால் கடந்த 24 மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% இனால் அதிகரித்துள்ளது.
ஈரான் நாடானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது கடந்த 24 மணித்தியாலங்களில் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 6% இனால் உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பதிவான மிக மோசமான மோதல் நிலை இதுவென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 6.79 அமெரிக்க டொலர்களால் அல்லது (6.3 சதவீதத்தால்) அதிகரித்து, 114.96 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 4.23 அமெரிக்க டொலர்களால் ( 4.2 சதவீதத்தால் )அதிகரித்து, 106.17 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.

