
மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் -மு.க.ஸ்டாலின் பதிவு
“மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் பல திட்டங்களை உருவாக்கி தமிழக மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்கினோம்.
தமிழகத்தை எல்லா வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில், எங்கள் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு கேட்டோம்.
நாங்கள் மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்வதற்காகவே வாக்கு கேட்டோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தான் விஜய்யுடன் பேசியதாகவும், கட்சியின் அற்புதமான வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.
“இந்த மக்கள் தீர்ப்பு, புறக்கணிக்கப்பட முடியாத இளைஞர்களின் வளர்ந்து வரும் குரலைப் பிரதிபலிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாதுகாப்பாகவும் சேவையிலும் இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்,” என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை , இன்று “செவ்வாய்க்கிழமை சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்திற்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என பெயர் குறிப்பிடாத விரும்பாத மேற்கு தமிழகத்தில் வெற்றி பெற்ற TVK வேட்பாளர் ஒருவர் டகத்திவெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்தார்.
பாஜகவை தனது கொள்கை ரீதியான எதிரி என விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால், அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
“நாங்கள் TVK உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது,” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

