ஜூலை 1க்கு முன்னர் அனைத்து முன்பள்ளிகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்

ஜூலை 1க்கு முன்னர் அனைத்து முன்பள்ளிகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டில் செயல்படும் அனைத்து முன்பள்ளிகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் புதிய முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக அவற்றை பதிவு செய்வது அவசியமான நிபந்தனையாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்பள்ளி கல்வி தொடர்பான வேலைத்திட்டங்கள் அமைச்சின் பாடத்திட்டத்திற்கமைவாக எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை வெளியிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )