நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 573 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 573 பேர் கைது

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (04) விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார், 573 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 28,422 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, 19 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 259 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 163 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )