நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கார்க்கி நாடாளுமன்றத்தை கலைத்தார்

நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கார்க்கி நாடாளுமன்றத்தை கலைத்தார்

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்ற சுஷில் கார்க்கி, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதியான அவர், நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக நேற்று இரவு பதவியேற்றார்.

நேபாள நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதேவேளை , தேர்தல் நடைபெறும் வரை 6 மாத காலத்திற்கு நியமிக்கப்பட்ட அந்நாட்டு அமைச்சரவையும் இன்று பதவியேற்கவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் அரசாங்காத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை மேற்கொண்ட ஜென் Z குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் உயர் இராணுவ அதிகாரிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் ,நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தலைமையில் ஒரு சிறிய அமைச்சரவை அமைக்கப்பட்டதுடன் முதல் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

முன்னாள் தலைமை நீதிபதி, எதிர்வரும் தேர்தல்கள் வரை நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பணியாற்றுவார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )