
மாலைதீவு ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இன்று நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அத்துடன், பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

