வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதற்காக இன்று (07) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

அதன்படி, வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவுநாட்டிற்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான இந்தப் பயணத்தில் சுமார் 200 தூதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் நாளை (08) இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

இதேவேளை வியட்நாம் ஜனாதிபதியின் பயணத்தின் போது, ​​இன்று மற்றும் நாளை கொழும்பு நகரில் ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )