மத்திய கிழக்கு போரால் நெருக்கடியில் விமான போக்குவரத்து துறை – கட்டணங்கள் உயர்வு

மத்திய கிழக்கு போரால் நெருக்கடியில் விமான போக்குவரத்து துறை – கட்டணங்கள் உயர்வு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான போர்நிறுத்தச் சூழலில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு 10 வாரங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக உலகளாவிய விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விமான எரிபொருளின் விலை 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் தங்களது பயணச்சீட்டு கட்டணங்களை உயர்த்த அல்லது விமானப் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் (Cirium) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சில பாதிப்புகள்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ,

ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில், விமானப் பயணங்களிலிருந்து 9.3 மில்லியன் இருக்கைகளை ரத்து செய்ய விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவை நடைமுறைப்படுத்தியுள்ளன.

எரிபொருள் செலவை ஈடுகட்டுவதற்காக பயணிகள் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

யுத்தச் சூழல் மற்றும் நீரிணை மூடப்பட்டதால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள், வரவிருக்கும் சுற்றுலாப் பருவத்தில் விமானப் பயணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Middle East wa

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )