தெனியாயவில் பரவும் வைரஸ் காய்ச்சல் – பிரதான 4 பாடசாலைகள் இன்றும் நாளையும் மூடப்படுகின்றன

தெனியாயவில் பரவும் வைரஸ் காய்ச்சல் – பிரதான 4 பாடசாலைகள் இன்றும் நாளையும் மூடப்படுகின்றன

தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்ஃபுளுவென்சா போன்ற வகையான வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தெனியாய கல்வி வலயத்திலுள்ள
தெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மெத்யூஸ் இருமொழிப் பாடசாலை , தெனியாய ராஜபக்ச வித்தியாலயம், பல்லேகம சித்தார்த்த ஆரம்பப் பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) மற்றும் நாளை (08) ஆகிய இரண்டு நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிசாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )