11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதல் நிகழ்வு இன்று

11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதல் நிகழ்வு இன்று

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam), இன்று (08) முற்பகல் இலங்கைப் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர விடுத்துள்ள விசேட அறிக்கையில் ,

”வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் இலங்கைப் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
முந்தைய நிகழ்வு: இதற்கு முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
வியட்நாம் ஜனாதிபதியை வரவேற்பதற்காக, அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து கௌரவ மரியாதைகளும் வழங்கப்படவுள்ளன.
முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து, சபாநாயகரால் ஜனாதிபதி டோ லாம் வரவேற்கப்பட்டதும்
தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.

இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )