
விசிகவின் ஆதரவு தாவெகவிற்கு – இன்று அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அவற்றில் திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது.
தற்போது த.வெ க ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன்போது பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

