
பஞ்சாப் – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளு டன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யவில்லை.
இந்த போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப் அணியும், 17-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா. பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கனோலி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், சூர் யான்ஷ் ஷெட்கே. ஷசாங் சிங், மார்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக், லோக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்,
டெல்லி: பதும் நிசாங்கா. லோகேஷ் ராகுல், நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்). அஷூதோஷ் ஷர்மா. விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க். லுங்கி இங்கிடி, முகேஷ் குமார், குல்தீப் யாதவ்.

