
கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மனுஷ
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

