இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர்

பிரதமரும் கலாநிதியுமான ஹரிணி அமரசூரிய 2025, நாளை 16 முதல் 18 வரையில், இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

தனது பயணத்தின்போது பிரதமர், இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி உட்பட பல உயர் மட்ட பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

17ஆம் திகதி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, NDTV உலக உச்சி மாநாட்டில் “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்தல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )